பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், தொழிற்சாலைகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.


பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், தொழிற்சாலைகளில் 'வந்தே மாதரம்' பாடலை பாடவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு | பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்களில் தேசபக்தி பாடலான 'வந்தே மாதரம்' பாடலை பாடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் பங்கேற்ற கே.வீரமணி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 'ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாளுக்கான 'டி' டைப் வினாத்தாளில் கேள்வி எண் 107-ல் 'வந்தே மாதரம்' என்ற பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? என கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு நான் வங்க மொழி என பதில் அளித்து இருந்தேன். ஆனால் 'கீ-ஆன்சரில்' சமஸ்கிருதம் என உள்ளது. அனைத்து பாடப்புத்தகங்களிலும் வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்டது என்றுதான் உள்ளது. இதனால் இந்த தேர்வில் 89 மதிப்பெண் பெற்ற என்னால் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற முடியவில்லை. எனவே, எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கி என்னை தேர்ச்சி பெற்றவனாக அறிவிக்க வேண்டும். அதுவரை ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல் காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். அட்வகேட் ஜெனரல் விளக்கம் இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன், இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், வக்கீல்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோரும் இந்த பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? என்பதற்கு ஆதாரங்களுடன், இந்த ஐகோர்ட்டுக்கு உதவலாம் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி ஆஜராகி, 'வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல்' என்று விளக்கம் அளித்தார். ஐகோர்ட்டு வக்கீல்கள் எஸ்.சுஜாதா, ஏ.எஸ்.பிலால், அண்ணாத்துரை ஆகியோர் இது சமஸ்கிருத பாடல் அல்ல. வங்கமொழியில் எழுதப்பட்ட பாடல் என்று ஆதாரங்களுடன் வாதிட்டார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.வி.முரளிதரன்... DOWNLOAD