மருத்துவ படிப்பில் 85 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


மருத்துவ படிப்பில் 85 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை | மருத்துவ படிப்பில் 85 சதவீத இடங்களை மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கி பிறப்பித்த அரசாணையை, தனி நீதிபதி ரத்து செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்பில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதமுள்ள 15 சதவீத இடங்களை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பிறவகை பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, அரசாணையை ரத்து செய்து 14-ந் தேதி உத்தரவிட்டார். நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- DOWNLOAD