பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகம்.


பொறியியல் படிப்புக்கு ஜூலை 17-ல் கலந்தாய்வு தொடக்கம் அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறை அறிமுகம் | பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு முதல்கட்ட கலந்தாய்வை ஜூன் 27-ம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருந்தது.இதற்கிடையே, நீட் நுழைவுத் தேர்வு விவகாரம் காரணமாக மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தள்ளிப்போனது. இதன் காரணமாக, பொறியியல் கலந்தாய்வை நடத்து வதில் அண்ணா பல்கலைக்கழகத் துக்கு நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், பொறியியல் கலந் தாய்வு காலஅட்டவணையை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: DOWNLOAD