பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியில் கல்வியாளர்கள் பங்கு பெறலாம் என SCERT இயக்குனர் அறிவிப்பு.ஆர்வமுள்ளவர்கள் www.tnscert.org என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை வருகிற 23-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.


பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியில் கல்வியாளர்கள் பங்கு பெறலாம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் தகவல் | சென்னையில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதுதொடர்பாக 22.5.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியையும், பாடப்புத்தகங்களை தயாரித்து வடிவமைக்கும் பணியையும் மேற்கொள்ள உள்ளது. அனுபவமிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள், ஆசிரியர்களை கொண்டு இந்த பணி செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பணியில் பங்குபெற ஆர்வம் உள்ள கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த கல்வி சீரமைப்பு அறிக்கைகளில் ஆழமான புரிதல் இருத்தல் வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் www.tnscert.org என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை வருகிற 23-ந் தேதிக்குள் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது | CLICK