எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு-அறிவியல் பாட செய்முறை பயிற்சி தனித்தேர்வர்கள் பதிவு செய்ய அழைப்பு.


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு-அறிவியல் பாட செய்முறை பயிற்சி தனித்தேர்வர்கள் பதிவு செய்ய அழைப்பு | அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள எஸ்.எஸ்.எல்.சி., (10-ம் வகுப்பு) பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித்தேர்வர்கள் (முதன் முறையாக அனைத்துப்பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 2012-க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் செய்முறைப்பயிற்சி வகுப்பிற்கு இந்நாள்வரை பெயர் பதிவு செய்திராத தனித் தேர்வர்களும் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இவர்கள் அனைவரும் 5-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்திசெய்து 2 நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் தனித்தேர்வர்கள் 30-ந் தேதிக்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். | DOWNLOAD