660 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


660 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | தமிழக சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ், உயர் கல்வித்துறை தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், மாநாட்டு அறைகள், கூட்டரங்கங்கள், கூடுதல் அறைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் 210 கோடி ரூபாய் செலவில் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும். இந்த 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டப்படும் கட்டிடங்கள், மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடங்கள்" என்ற பெயரில் அழைக்கப்படும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2017-18-ம் கல்வியாண்டில் துவங்கப்படும். இதற்காக அரசுக்கு 100 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2017-18-ம் கல்வியாண்டில் இருந்து 268 புதிய பாடப்பிரிவுகள் (60 இளங்கலை, 75 முதுகலை, 133 ஆராய்ச்சி) அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இப்பாடப்பிரிவுகளை கையாள 660 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக அரசிற்கு ஆண்டிற்கு 40 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்  DOWNLOAD