முதன்மை கல்வி அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்-3 பேருக்கு பதவி உயர்வு | வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக எஸ்.மார்ஸ் நியமிக்கப்படுகிறார்.


முதன்மை கல்வி அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் | தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பூபதி, இடமாற்றம் செய்யப்பட்டு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் துணை இயக்குநராக நியமிக்கப்படுகிறார். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எஸ்.மார்ஸ் மாற்றப்பட்டு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியமர்த்தப்படுகிறார். தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் கே.முனுசாமி இடமாற்றம் செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். பதவி உயர்வு சென்னை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் மனோகர், திருநெல்வேலி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் எஸ்.பாலா, கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி ஜெ.பாபு, விருத்தாசலம் (கல்வி மாவட்டம்) மாவட்டக் கல்வி அதிகாரி கே.தனமணி ஆகியோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுகிறார்கள். மனோகர், சென்னை மாவட்டத்திலும், தனமணி, நெல்லை மாவட்டத்தி லும் பாலா, கன்னியாகுமரி மாவட்டத்திலும் பணியமர்த்தப்படுகிறார்கள். பாபு, தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது | DOWNLOAD