வெயில் கொளுத்துவதால் தமிழக அரசு நடவடிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்.21 முதல் விடுமுறை


வெயில் கொளுத்துவதால் தமிழக அரசு நடவடிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்.21 முதல் விடுமுறை | தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதால் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறி வித்துள்ளார். பொதுவாக பள்ளிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்டு ஏப்ரல் இறுதி வாரத்தில் இருந்து கோடை விடுமுறை விடப்படும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1-ம் தேதி முதல் விடுமுறை விடப்படும். இந்த ஆண்டு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-ம் தேதியில் இருந்தும், நடுநிலை, தொடக்கப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 30-ம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை விடப்படுவதாக இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு மார்ச் தொடக்கத்தில் இருந்தே வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீ்ட்டை தாண்டியுள்ளது. கடும் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை, வெயிலின் கடுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. அதேபோல, நடு நிலைப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை ஏப்ரல் 30-ம் தேதியில் இருந்து 21-ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப் பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர் களிடம் நேற்று கூறியதாவது: உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களுக்கு ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வெயில் காரணமாக, நடுநிலைப் பள்ளிகளுக்கான கடைசி வகுப்பு ஏப்ரல் 30-ம் தேதியில் இருந்து 21-ம் தேதிக்கு ஏற்கெனவே மாற்றப்பட்டுவிட்டது. அதேபோல தொடக்கப் பள்ளிகளுக்கான கடைசி வகுப்பு ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்ப தால் பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப் படாமல் இருப்பதற்காக கடைசி வகுப்பை ஏப்ரல் 21-ம் தேதிக்கு மாற்றியமைக்குமாறும் அதற்குள் தேர்வுகளை நடத்தி முடிக்குமாறும் தொடக்கப் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம். சிறப்பு வகுப்புகள் கூடாது பொதுவாக பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்த வேண்டாம் என்று பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப் படும். இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் புதன் கிழமை (இன்று) அனுப்பப்படும். அரசு உத்தரவை மீறி, கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட் டையன் கூறினார். அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, தொடக்கப் பள்ளிகளுக் கான ஆண்டு இறுதித் தேர்வு களை 21-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தொடக்கக் கல்வி இயக்ககம் உடனடி நடவடிக்கை யில் இறங்கியது. இன்று (19-ம் தேதி) முதல் 21-ம் தேதி வரை தினமும் காலையும், மாலையும் தேர்வுகளை நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுட்டெரிக்கும் வெயில் இந்நிலையில், ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் 13 நகரங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை விட அதிகமாக இருந்தது. திரு வள்ளூரில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 113 டிகிரி ஃபாரன் ஹீட் வெப்பநிலை பதிவானது. ஏப்ரல் 17, 18 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் இடம்பெற்றுள்ள சென்னை உள்ளிட்ட 20 மாவட் டங்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தி ருந்தது. அதைத் தொடர்ந்து 20 மாவட்டங்களிலும் உரிய நட வடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.