பள்ளி அமைச்சு பணியாளர் பணியிடம் பகிர்ந்தளிக்கப்படுமா?


பள்ளி அமைச்சு பணியாளர் பணியிடம் பகிர்ந்தளிக்கப்படுமா? | கோவையில், 1,800க்கும் மேற்பட்ட, அரசுப் பள்ளிகள் உள்ளன. இங்கு, அலுவலக கோப்புகள் கையாள, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அமைச்சு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவை எட்டியுள்ளது. இதனால், பணி நிரவல் கலந்தாய்வு மூலம், ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆனால், பள்ளிகளில் உள்ள, அமைச்சு பணியாளர்கள் மட்டும், ஒரே பள்ளியிலே பணிப்புரிகின்றனர். சுண்டப்பாளையம், தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு பள்ளிகளில், ஐந்துக்கும் மேற்பட்ட, அமைச்சு பணியாளர்கள் பணிப்புரிகின்றனர். இவர்களை, உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில், காலியாக உள்ள அமைச்சுப் பணியாளர் இடங்களுக்கு, பணி நிரவல் செய்தால், பணிப்பளுவை சமாளிக்க உதவியாக இருக்கும் என, அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க உறுப்பினர்கள் கூறுகையில், 'கிணத்துக்கடவு, மதுக்கரை மற்றும் நகர உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்களில், பத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள், மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இதனால், நலத்திட்ட பொருட்கள் வினியோகித்தல், தேர்வு சமயங்களில், அதிக பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே, பள்ளிகளில் கூடுலதாக உள்ள அமைச்சு பணியாளர்களை, உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு பணிநிரவல் செய்ய வேண்டும். இதை, வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள, அலுவலர்களுக்கான கலந்தாய்வில் நடைமுறைப்படுத்தினால், பணிகள் விரைந்து முடிக்க, உதவியாக இருக்கும்,'என்றனர். ...., அலுவலகத்தில் காலிப்பணியிடம்; ஆசிரியருக்கு வழங்க தீர்மானம்! Posted: 01 Jan 2017 11:06 PM PST 'தமிழகத்தில் காலியாக உள்ள உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்துக்கு, அத்துறையில் பணியாற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியருக்கு, போட்டித்தேர்வு நடத்தி, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்டத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். ஆறாவது ஊதியக் குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான ஊதிய பாதிப்புகளை களைந்து, தர ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக, ..எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2016ல், மாணவர் மற்றும் ஆசிரியர் நலன்களுக்கு எதிராக காணப்படும் சரத்துக்களை நீக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளுக்கு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமிக்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு, தற்போது அத்துறையில் பணியாற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியருக்கு, போட்டித்தேர்வு நடத்தி, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.