மாணவர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள பயிற்சிகள் அவசியம் நகராட்சி ஆணையாளர் பேச்சு


மாணவர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள பயிற்சிகள் அவசியம் நகராட்சி ஆணையாளர் பேச்சு | தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 5 நாள் இலவச விடுமுறை கால பயிற்சி முகாமை தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார். விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை வாசுகி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசுகையில் ,மாணவர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள பயிற்சிகள் அவசியம்.கழுகும்,மீனும் ஒரே மாதிரியான பயிற்சி எடுத்து வெற்றி பெற முடியாது.அவர்,அவர்களுக்கு என்ன முடியுமோ அதற்கான பயிற்சிகளை எடுத்து கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.மாணவர்கள் இது போன்ற பயிற்சி முகாம்களை பயன்படுத்தி தங்களது தனி திறனை வளர்த்து கொள்வதில் ஆர்வம் காட்டி சாதனையாளராக வர முயற்சி எடுக்க வேண்டும்.முயற்சி செய்து பயிற்சி செய்தால் வாழ்க்கையில் அனைவருமே நல்ல நிலைமைக்கு வளர இயலும்.இவ்வாறு ஆணையாளர் பேசினார்.


பயிற்சியில் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.சார்ட் அட்டையில் எவ்வாறு பெயிண்ட் செய்வது என்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.மழை நீர் சேகரிப்பு,புவி வெப்பமடைதல்,காடுகள் அழிப்பு,நகரமயமாதல்,பறவைகள் சரணாலயம் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் பல குழுவாக பிரிந்து பயிற்சி எடுத்து கொண்டனர்.அகஸ்தியா நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் கவியரசு,முத்துச்செல்வன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார். பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 5 நாள் இலவச விடுமுறை கால பயிற்சி முகாமை தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.