மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய புதிய குழு அமைப்பு


மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய புதிய குழு அமைப்பு | மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய புதிய தேர்வுக்குழு அமைக் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித் துறை செயலர் ஏ.கார்த்திக் வெளியிட்டுள்ள உத் தரவில் கூறியிருப்பதாவது: மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுவை அரசு மாற்றி அமைத்துள்ளது. பல்கலைக்கழக வேந்தரின் நிய மனதாரரான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தின் உறுப்பினரும், சென்னை பல்கலைக்கழக பொருளாதாரத் துறை முன்னாள் பேராசிரி யருமான சி.முருகதாஸ் இக்குழுவின் அமைப்பாளராக இருப்பார். சிண்டிகேட் நிய மனதாரரான ஹரிஷ் எல்.மேத்தா, செனட் நியமனதாரரான ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படு வார்கள். துணைவேந்தர் பதவிக்கு தகுதிவாய்ந்த 3 நபர்களை பல்கலைக்கழக வேந்தரான ஆளு ருக்கு இந்த தேர்வுக்குழு பரிந் துரை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகப் புதிய துணைவேந்தரை தேர்வுசெய்ய ஏற்கெனவே ஒரு தேர்வுக்குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. அதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் முருக தாஸ், சென்னையைச் சேர்ந்த ஹரிஷ் எல்.மேத்தா, மதுரை யைச் சேர்ந்த மு.ராமசாமி ஆகி யோர் இடம்பெற்றிருந்தனர். தற்போது அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவில் ராமசாமிக்கு பதில் ஜி.ராமகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.