11-ம் வகுப்பு படிக்கும் 6½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் விரைவில் வழங்கப்படுகிறது


11-ம் வகுப்பு படிக்கும் 6½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் விரைவில் வழங்கப்படுகிறது | 11-ம் படிக்கும் மாணவ- மாணவிகள் 6½ லட்சம் பேர்களுக்கு விலை இல்லா சைக்கிள்கள் விரைவில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டம் தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமுதாயங்களை சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா 2001-2002-ம் ஆண்டு தொடங்கிவைத்தார். பின்பு 2005-2006-ம் ஆண்டில் மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா விரிவுபடுத்தினார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மற்றும் பகுதியாக அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் அனைத்து பிரிவு மாணவ-மாணவிகளுக் கும் சைக்கிள்கள் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர். விரைவில் சைக்கிள்கள் நடப்பு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் 6½ லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக சைக்கிள்களை ஒன்று சேர்க்கும் பணி அந்தந்த கல்வி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட பல பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. சைக்கிள்கள் ஒன்று சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்தப்பணி முடிந்து விரைவில் மாணவ-மாணவிகளுக்கு வழங்க உள்ளது.