தஞ்சாவூர்தமிழ்ப் பல்கலைக்கழகம் பத்தாவது பட்டமளிப்பு விழா - விரிவான தகவல்கள்

தஞ்சாவூர்தமிழ்ப் பல்கலைக்கழகம்  பத்தாவது பட்டமளிப்பு விழா - விரிவான தகவல்கள் 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 ம் தேதியை அரசு பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 ம் தேதியை அரசு பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: எம்.ஜி. ராமசந்திரனின் 100 வது பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு, 17.01.2017 (செவ்வாய் கிழமை) மட்டும் செலவாணி முறிச்சட்டம் 1881- ன் கீழ் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பொது விடுமுறையானது தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள், அரசினால் அமைக்கப்பட்டுள்ள வாரியங்கள் மற்றும் கழகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அதிகார அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகள், தொழிற்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் முதலியவற்றிக்கும் பொருந்தும். பிற நிறுவனங்களும் இவ்விழாவின் சிறப்பினை கருத்தில் கொண்டு தங்களது அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு அரசிதழில் வெளிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இன்று வெளியான அறிவிப்பையடுத்து, நாளை முதல் செவ்வாய் கிழமை வரை 4 நாட்கள் தொடர்ச்சியாக தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுமுறையாக அமைந்துள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.


வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு. | தமிழக வறட்சி நிவாரணத்துக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்குவது என அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்களைக் கொண்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு முடிவெடுத்துள்ளது. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் அமைப்புகள் இணைந்து ஜாக்டோ - ஜியோஅமைப்பாக உருவாகியுள்ளது. இதன் பிரதிநிதிகள் கூட்டம்,சென்னை பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், ஜாக்டோ - ஜியோவின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன்தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜெ.கணேசன் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளன. வறட்சி நிவாரணத்துக்காக ஜாக்டோ -ஜியோ சங்கங்களில் உள்ள 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவெடுத்துள்ளோம். இது உத்தேசமாக ரூ.40 கோடி அளவுக்கு வரும் என்றார் அவர்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி.


17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி. | பதினேழு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட, பதவி உயர்வு விதிகளை மாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வி அமைச்சரிடம், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடக்க பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான விதிகளில், குளறுபடி நீடிக்கிறது. அதாவது, 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி முடித்து பணியில் சேர்ந்தவர்கள், தொடக்க பள்ளிகளில் தலைமை ஆசிரியராகவும், பின், பட்டதாரி ஆசிரியராகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். தொடர்ந்து, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக, பணிமூப்புஅடிப்படையில், பதவி உயர்வு பெறுகின்றனர். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்த பதவி உயர்வு எதுவும் கிடைக்கவில்லை. 1999ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, பட்டம் பெறாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கே, பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து, இந்த குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சங்க பொதுச்செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: பட்டதாரிஆசிரியர்கள் இல்லாததால், 1999ல், இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், பதவி உயர்வு விதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதே நேரம், 14 ஆண்டுகளாக, பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், பழைய விதிகளை மாற்றாமல், பதவி உயர்வு வழங்கப்படுவதால், நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்காமல், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்வியாண்டு முடியும் போது புத்தக வினியோகம்: மாணவர்கள் அதிர்ச்சி.


கல்வியாண்டு முடியும் போது புத்தக வினியோகம்: மாணவர்கள் அதிர்ச்சி. | கல்வியாண்டின் துவக்கத்தில் வழங்க வேண்டிய, பங்குச்சந்தை பாட புத்தகங்களை, இறுதி தேர்வு நெருங்கும் நிலையில் அதிகாரிகள் வழங்கியது, ஆசிரியர்கள், மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் தேசிய பங்குச்சந்தை நிறுவனம், மாணவர்களுக்கு நிதி மற்றும் பங்குச்சந்தை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த, கூடுதல் பாடம் நடத்துமாறு, மாநிலங்களை வலியுறுத்தியது. இதற்கான பாட புத்தகங்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் மூலமாக, இலவசமாக வழங்குகிறது.தமிழகத்தில், எட்டு, ஒன்பது மற்றும் பிளஸ் 1ல் வணிகவியல், பொருளியல் வகுப்புகளுக்கு, பங்குச்சந்தை விழிப்புணர்வு பாடங்கள் நடத்தப்படுகின்றன. பாட புத்தகங்கள், கல்வியாண்டின் துவக்கத்தில் வழங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்படும். அரையாண்டு தேர்வுக்கு பின், திருப்புதல் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு, மீண்டும் ஒரு முறை பாடங்கள் நினைவூட்டப்படும். ஆனால், தமிழக பள்ளி கல்வித்துறையில் மிக தாமதமாக, அரையாண்டு தேர்வு முடிந்த பிறகே, பங்குச்சந்தை பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள், அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அதனால், பல பள்ளிகளில், மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து, ஆசிரியர்கள், பாடங்களை மீண்டும் ஒரு முறை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புதிதாக கொடுத்த பங்கு சந்தை புத்தகங்களின் பாடங்களை, எப்போது நடத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கூறுகையில், 'பாட திட்டத்தை மாற்றுவதில், பள்ளி கல்வித்துறை பின்னடைவில் உள்ளது. பாட புத்தகங்களை வழங்குவதிலும், இவ்வளவு மெத்தனமாக இருப்பது வருத்தமாக உள்ளது' என்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும், ,8,000 ஆசிரியர் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் பாண்டியராஜன்


ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும், ,8,000 ஆசிரியர் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்அமைச்சர் பாண்டியராஜன் | ''ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு, இப்போது இல்லை,'' என, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.தமிழகத்தில், 2011 முதல், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை, தர பட்டியல் தயாரித்தல் போன்றவற்றில்,சில பிரச்னைகள் ஏற்பட்டன.இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனு, இரு மாதங்களுக்கு முன், தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், ஆசிரியர் தகுதித் தேர்வு, மூன்றாண்டுகளாக நடத்தப்படவில்லை.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்ததால், விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார். இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார்.பின், அவர் கூறியதாவது:பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர் மற்றும் பணியாளர் பதவிக்கு, 8,000 காலியிடங்கள் உள்ளன; அவை விரைவில் நிரப்பப்படும். ஏற்கனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் காத்திருப்பதால், அவர்கள் மூலம், காலி இடங்கள் நிரப்பப்படும்.எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை, உடனடியாக நடத்த வேண்டிய அவசியம் எழவில்லை. புதிதாக தேர்வை நடத்தினால், அதில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கும் வேலை இல்லை என்று கூறுவர். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு, தாமதமாகவே வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு.


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு. | எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வியாழக்கிழமை (ஜன.12) வெளியாகவுள்ளது. அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும்கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்துள்ளது.மேலும், ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தைக் கொண்டாடவும் அந்தக் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு விடுமுறை: கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினம் என்பதால் வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, அரசுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: அரசு பொது விடுமுறை விட வேண்டுமென்றால், அதற்கான கோப்புகள் பொதுத் துறையின் மூலமாக தயார் செய்யப்பட்டு முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், இந்த பொது விடுமுறை என்பது ஊதியத்துடன் கூடியதாக இருக்கும். மத்திய-மாநில அரசுகளின் விடுமுறைப் பட்டியலில் இல்லாத தினங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க முடியாது. எனவே, இதற்கென தனியான உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கப்படும்.இந்த விடுமுறையை விடுவதற்கான கோப்புகள் கையெழுத்திடப்பட்டு, அதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை (ஜன.12) அல்லது வெள்ளிக்கிழமை (ஜன.13) வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை!


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை! | மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு- கடந்த 2013 ல் நடந்த TET தேர்வில் தேர்ச்சி பெற்று மூன்று வருடங்களாக எந்த விடையும் தெரியாத எங்களுக்கு தங்களின் தற்போதைய அறிவிப்பு ஒரு வித நிம்மதியாக உள்ளது. அதே சமயம் நாங்கள் பள்ளி செல்லும் காலத்தில் பள்ளி செல்வதே சிரமமான சூழலில் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களுமின்றி படித்து தேர்ச்சி பெறுவதே போராட்டமாக இருந்தது. அத்தகைய சூழலில் படித்து அன்றைய சூழலில் அதிக மதிப்பெண் பெற்று( இன்றைய சூழலில் அது குறைந்த மதிப்பெண்)தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றோம்.என்றாவது ஒருநாள் எங்களின் ஆசிரியர் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த எங்களுக்கு தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு பெரும் சவாலாக அமைந்தது.பணிக்குச் சென்று குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்து கஷ்டத்திலும் நம்பிக்கை விடாது படித்து தகுதித் தேர்வில் தேர்ச்சியும் பெற்றோம்.ஆனால் தற்போது TET தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் முறையால் எங்களின் முயற்சிகள் செல்லாக்காசாகி நிற்பது எங்களுக்கு பெரும் மனவேதனையை தருகிறது.நாங்கள் 140 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றாலும் ஆசிரியராக முடியாத ஒரு சூழலை காணமுடிகிறது.எனவே தாங்கள் எங்களின் மீது கருணை உள்ளம் கொண்டு யாரையும் பாதிக்காத வண்ணம் தேர்வு செய்யும் முறையை மாற்றி அமைத்திட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் எங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்து உதவிட வேண்டும் என்றும் பணிவோடு வேண்டுகிறோம்.இம்முறை அறிமுகம் செய்தால் இன்றில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் ஆசிரியர் பணி கிட்டும் என்ற நம்பிக்கையிலாவது எங்கள் வாழ்க்கைச் சக்கரம் ஓடும் இப்படிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு(40 வயதை கடந்த) ஆசிரியர்கள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஆய்வக உதவியாளர் 4 ஆயிரத்து 900 பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி


தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி | ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் இருந்து இப்போது அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். நல்ஒழுக்கம் கற்பிக்க பயிற்சி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 6-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 60 வகையான நல் ஒழுக்கத்தை கற்பிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. அதன்படி முதல் முறையாக சென்னை டி.பி.. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அதன் இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் ஏற்பாட்டில் நேற்று பயிற்சி தொடங்கியது. பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆசிரியர்கள் நியமனம் பள்ளிக்கூடத்திற்கு மாணவ-மாணவிகள் அவர்கள் சார்ந்துள்ள மதத்தை பின்பற்றி அந்த சின்னத்தை உதாரணமாக விபூதி, குங்குமம், சிலுவை, பர்தா ஆகியவை அணிந்து வருவதில் தவறு இல்லை. இதுகுறித்து 4 புகார்கள் வந்தன. அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். மதத்தின் சின்னத்தை அணிந்து வருவது அவர்களின் நம்பிக்கை. எனவே மாணவர்கள் அணிந்து வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு உடனே நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே 30 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இப்போது அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை கணக்கெடுத்து வருகிறோம். கணக்கெடுத்தபிறகு காலியாக உள்ள ஆசிரியர்கள் பணிக்கு ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 4 ஆயிரத்து 900 பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 8 ஆயிரம் உள்ளன. அந்த பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். அரசு நலத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அரசு திட்டங்களும் முறையாக சென்று அடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் பணியிடங்களும் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார். முன்னதாக ஆசிரியர் பயிற்சி தொடக்க விழாவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் .சபீதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் ராகுல்நாத், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் .அறிவொளி, .கண்ணப்பன், ரெ.இளங்கோவன், .கருப்பசாமி, மு.பழனிச்சாமி, இணை இயக்குனர் வை.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது: தமிழக அரசில் பணியாற்றும் மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியமாக வழங்கப்படும். அதேபோல் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 சிறப்பு மிகை ஊதியமாக வழங்கப்படும். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SGT TO BT PROMOTION COUNSELLING - இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெற உள்ளது.


SGT TO BT PROMOTION COUNSELLING - இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெற உள்ளது. | இடைநிலைசிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு 06.09.2016 அன்று நடைபெற்றது. அதில் முன்னுரிமைப் பட்டியலில் 1 முதல் 301 வரையிலான ஆசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அக்கலந்தாய்வில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிய 51 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதை கருத்தில் கொண்டு தற்பொழுது முன்னுரிமைப் பட்டியலில் 302 முதல் 616 வரையில் உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு 12.01.2017 அன்று Online counselling மூலம் நிரப்பப்பட உள்ளது.

DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவிப்பு


10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவிப்பு | 2017-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொது தேர்வு தேதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இது தொடர்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாவது, 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10-ம் தேதி முடிகிறது.இதில் 16,67,673 பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29-ம் தேதி முடிகிறது. இதனை 10, 98, 420 பேர் எழுதுகின்றனர். 

download date sheet

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்கிறது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடை கிறது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி ஆரம்பித்து 30-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலை யில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆண்டு பொதுத் தேர்வு கள் பற்றிய அறிவிப்பு வெளியானது.

CLASS 10 CBSE EXAM DATE SHEET TIME TABLE DOWNLOAD


CLASS 12 CBSE EXAM DATE SHEET TIME TABLE DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

JEE-MAIN | ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., தேர்வு அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17, 2017


ஜே..., தேர்வு அறிவிப்பு! | நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்க்கை பெற எழுத வேண்டிய தேசிய நுழைவுத் தேர்வான, ஜாயின்ட் என்டரன்ஸ் எக்சாமினேஷன் (ஜே...,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுமத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்..,) நடத்தும் இந்த பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையிலேயே, ..டி., ...டி., ..எஸ்சி., என்..டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

 

தகுதிகள்

பி.., பி.டெக்., ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2வில், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் வேதியியல், உயிரியல் அல்லது தொழிற்கல்வி படிப்புகள் போன்ற ஏதேனும் ஒரு பாடத்தை முதன்மை பாடமாக பயின்றிருக்க வேண்டும்.பி.ஆர்க்., படிப்பில் சேர்வதற்கு பிளஸ் 2வில் கணிதத்தை ஒரு பாடமாக பயின்று சேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பாடங்களிலும் குறைந்தது, தலா 45 சதவீத மதிப்பெண்களும், ஒட்டுமொத்தமாக 75 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களும் ஜே..., தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

இரு நிலைகள்

ஜே..., தேர்வு, மெயின் மற்றும் அட்வான்ஸ்டு எனும் இரண்டு நிலைகளை கொண்டது. நாட்டில் உள்ள ..டி.,களிலும் மற்றும் முக்கிய பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் சேருவதற்கு ஜே..., மெயின் தேர்வை தொடர்ந்து ஜே..., அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வையும் எழுத வேண்டும். மெயின் தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் என்..டி., ...டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே, இரண்டாம் நிலையான அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெறும் மாணவர்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, கல்வி நிறுவனங்களில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

 

தேர்வு முறை

தாள் 1: இளநிலை பி.., மற்றும் பி.டெக்.,

இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எழுத்து அல்லது கணினி அடிப்படை தேர்வு முறைகளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

 

தாள் 2: இளநிலை பி.ஆர்க் மற்றும் பி.பிளானிங்

கணிதம், திறனறிவு தேர்வு மற்றும் வரைதல் போன்ற பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும்.

 

குறிப்பு: ஜே..., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆதார் எண் அட்டை வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17, 2017

 

மேலும் விவரங்களுக்கு: www.jeemain.nic.in

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம்


சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம் ஐந்து மாநில தேர்தலை கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடு | சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்கிறது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடை கிறது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி ஆரம்பித்து 30-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலை யில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆண்டு பொதுத் தேர்வு கள் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. சிபிஎஸ்இ நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவை, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆண்டு பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. தற்போதைய சூழலை தீவிரமாகப் பரிசீலித்து இத்தேர்வு ஒருவாரம் தள்ளி நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு சிறப்பாக தயாராவதுடன், தேர்வையும் இடையூறின்றி தொடர்ச்சியாகவும் நடத்த முடியும். சிபிஎஸ்இ தேர்வுக்கு முன்ன தாக ஜெஇஇ (ஜாயிண்ட் என்ஜினீயரிங் தேர்வு) மற்றும் நீட் தேர்வு நடைபெறவிருப்பதால், மாணவர்கள் இத்தேர்வு எழுத வசதியாகவும், அதேநேரத்தில் சிபிஎஸ்இ-யின் முக்கிய பாடத் தேர்வுகளுக்கு இடையே இடை வெளி இருக்கும் வகையிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. விடைத்தாள்களை விரைவாக திருத்தி குறித்த நேரத் தில் தேர்வு முடிவுகள் வெளியிட வும் ஏற்பாடு செய்யப்பட்டிருக் கிறது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்தாண்டு நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 14 லட்சத்து 91 ஆயிரத்து 371 பேர் எழுதினர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 லட்சத்து 65 ஆயிரத்து 179 பேர் எழுதினார்கள். இந்தாண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் எழுதுகிறார்கள். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 லட்சத்து 98 ஆயிரத்து 420 மாணவர்கள் எழுதுகிறார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போதைய சூழலை தீவிரமாகப் பரிசீலித்து இத்தேர்வு ஒருவாரம் தள்ளி நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு சிறப்பாக தயாராவதுடன், தேர்வையும் இடையூறின்றி தொடர்ச்சியாகவும் நடத்த முடியும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE